சீனாவில் நடைபெற்றுவரும் 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 21 வருடங்களின் பின்னர் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் எமது நாட்டிற்காக தங்கப் பதக்கத்தை பெற்றுத்தந்த தருஷி கருணாரத்னவிற்கு சபையில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபையில் தெரிவித்தார்.
வீராங்கனையை இத்துறைக்கு கொண்டு வந்த கண்டி வளல ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயத்திற்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
ஆசியா விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம், மகளிருக்கான 400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கமும், ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்ற அனைவருக்கும் தானும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவும் வாழ்த்து தெரிவித்தார்.










