2025 பெப்ரவரி 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதிவரை இந்திய, ராஜஸ்தானில் நடைபெற்ற அகில இந்திய திறந்த மெய்வல்லுனர் போட்டிகளில், இலங்கை சார்பில் பங்கேற்றிருந்த மலையக இளைஞன் துரைசாமி விஜிந்த் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
பூண்டுலோயா சீன் பழைய தோட்டத்தை பிறப்பிடமாகக்கொண்ட துரைசாமி விஜிந்த, 5000 மீற்றர் வேகநடை, சுற்றி எறிதல் மற்றும் பருதிவட்டம் வீசுதல் ஆகிய போட்டிகளிலேயே தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
அவரின் திறமையை பாராட்டி, அகில இந்திய வைத்தியர்கள் சங்கத்தால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.