18 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் இந்திய பிரஜைகள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 1200 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள், சுங்க அதிகாரிகளுக்கு தெரியாமல் GREEN CHANNEL நுழைவாயில் ஊடாக தங்கத்தை கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர்.
38 மற்றும் 28 வயதான மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.