தங்கம் வென்ற மலை மகனுக்கு தலவாக்கலையில் அமோக வரவேற்பு!

தங்கம் வென்ற மலை மகனுக்கு தலவாக்கலையில் அமோக வரவேற்பு!

பாகிஸ்தானில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளுக்கிடையிலான சிரேஷ்ட பிரிவு நகர்வல ஓட்டப்போட்டியில் தங்க பதக்கம் பெற்ற வக்சன் விக்னராஜிற்கு தலவாக்கலை நகரில் இன்று அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

தலவாக்கலை நகரில் ஆரம்பமான வரவேற்பு ஊர்வலம், மிடில்டன் தோட்டம்வரை சென்றது. பெருமளவானோர் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

பாக்கிஸ்தான், இஸ்லாமாபாத் நகரின் பாத்திமா ஜின்னா பூங்காவில் கடந்த (23) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தெற்காசிய நாடுகள் பங்குபற்றிய சிரேஷ்ட பிரிவுக்கான நகர்வல ஓட்டப்போட்டியில் இவர், 10 கிலோமீற்றர் தூரத்தை 31 நிமிடங்கள் 56.38 செக்கன்களில் ஓடி முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவராவார்.
பொகவந்தலாவ நிருபர் சதீஸ்

Related Articles

Latest Articles