தந்தைமீது மகன் தாக்குதல்: வட்டவளை வைத்தியசாலையில் அனுமதி

 

வட்டவளை, அகரவத்தை தோட்டத்தைச் சேர்ந்த 56 வயதுடைய தந்தையொருவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது 30 வயது மகனால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த 27.11.2026 அன்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறு முற்றியதையடுத்து, மகன் தனது தந்தையைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட தந்தை தொடர்பில் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர், பொலிஸாரின் அனுமதியுடன் அவர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles