தனது தந்தையை வாய்பேசமுடியாத மகனொருவர் அடித்துகொலை செய்த கொடூரச் சம்பவமொன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது.
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, வெவெஸ்த்தை பெருந்தோட்ட பகுதியில் 34 வயதுடைய வாய்பேசமுடியாத மகன், தனது 60 வயதுடைய தந்தையை மரக்கட்டையால் தலையில் தாக்கியுள்ளார்.
இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் 34 வயதுடைய வாய்பேசமுடியாத மகனை நேற்று இரவு பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்கிய இளைஞரின் தாயார் இரண்டு திருமணங்கள் முடித்தவர் என்பதுடன் முதல் கணவர் அவரை விட்டு சென்றுள்ளதாகவும் தாயாரின் இரண்டாவது கணவரையே மகன் தாக்கி கொலை செய்துள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றர் .
ராமு தனராஜா










