தனித்து ஆட்சியமைப்பதற்குரி ஆணை கிட்டும்: தமிழரசுக் கட்சியுடன் டீல் இல்லை!

” பொதுத்தேர்தலின் பின்னர் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழரசுக் கட்சியுடன் நாம் எவ்வித பேச்சும் நடத்தவில்லை. தனித்து ஆட்சி அமைப்பதற்குரி பெரும்பான்மை பலம் எமக்கு கிடைக்கப்பெறும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், ஜே.வி.பியின் பொதுச்செயலாளருமான ரில்வின் சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது,

ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) சஜித் பிரேமதாசவுக்கே ஆதரவளித்தது. எமக்கு ஆதரவளிக்கவில்லை.  இம்முறை அக்கட்சியினர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தல் தொடர்பில் எம்மிடையே இணக்கப்பாடு எதுவும் இல்லை. அது சம்பந்தமாக பேச்சு நடத்தப்படவும் இல்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் சாதாரண பெரும்பான்மையைவிடவும் அதிகமான ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெறும். எனவே, ஆட்சியமைப்பதற்குரிய உதவியை அவர்களிடம் (தமிழரசுக் கட்சி) கோருவதற்குரிய சாத்தியம் எழாது.
எமக்கு நாடாளுமன்றத்தில் பெரும் பலம் தேவையில்லை, அரசாங்கத்தை பலமாக முன்னெடுப்பதற்குரிய பெரும்பான்மை பலம் இருந்தால் போதும்.”- என்றார்.
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles