தனிமைப்படுத்தப்பட்டார் கம்மன்பில – வலுசக்தி அமைச்சுக்கும் பூட்டு

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையிலேயே, அமைச்சர் தன்னையும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

தனக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன்ட் பரிசோதனை முடிவு ‘நெகடிவ்’ என வந்திருந்தாலும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 அத்துடன் வலுசக்தி அமைச்சும் 6 ஆம் திகதிவரை மூடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles