தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 45 பேர் கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 45 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக நாட்டில் இதுவரை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 907ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles