முகக்கவசம் அணியாமை உட்பட தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 108 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டத்தை கட்டாயப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்த காலப்பகுதி முதல் நேற்று வரை மொத்தமாக 3 ஆயிரத்து 75 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, இக்காலப்பகுதியில் எந்தவொரு நிகழ்வையும் நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அரச அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
