தனிமையில் இருந்த யுவதி வண்புனர்வு! பண்டாரவளையில் கொடூரம்!!

தனிமையில் வீட்டில் இருந்த 18 வயது யுவதி, இனந்தெரியாத ஒருவரினால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

இக்கொடூரச் சம்பவம் பண்டாரவளை, அம்பேதன்டகம என்ற இடத்தில் இன்று இடம்பெற்றுள்ளதாக  பண்டாரவளைப் பொலிசார் தெரிவித்தனர்.

தனிமையிலிருந்த யுவதியை துஸ்பிரயோகம் செய்த இனந்தெரியாத நபர் தப்பியோடியுள்ளார்.

தமது பெற்றோர் வீடு வந்தபோது தனக்கேற்பட்ட நிலையினை அவ்யுவதி கூறியுள்ளார். தற்போது அவ்யுவதி, பண்டாரவளை அரசினர் மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

யுவதியை துஸ்பிரயோகம் செய்த நபரைத் தேடி, பண்டாரவளை  பொலிசார் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

நிருபர் – எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles