தனி ஒருவனாக மலையகத்தை மாற்றுவேன்!

“மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் மலையகத்தில் உள்ள அனைத்து மாற்று கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு இணைந்து செயற்பட முடியாவிட்டால் தனிஒருவனாக நின்று மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவேன்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நாம் இன்று காணி உரிமையை கோரவேண்டும், நமது சமூகத்தை நாமே இழிவுபடுத்த கூடாது, மலையகத்தில் மாற்றம் வரவேண்டுமென்றால் நம்முடைய அடையாளம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும், நமக்கு ஒரு தெளிவு இல்லையென்றால் எதனைசெய்தாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது .

மலையக மக்களின் வாக்குகளுக்கு தேர்தல் காலங்களில் விலைகோரப்படுகிறது ,உங்கள் மத்தியில் இருந்து தலைவர்களை உருவாக்கவேண்டுமென்றால் உங்களுடைய சிந்தனைகளை முன் கொண்டு செல்ல வேண்டும்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தை சில பேர் குறைகூறினார்களே தவிர எவரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை, தனியாக நின்று சாதித்து காட்டியிருக்கிறோம்.

கடந்த 2020ம் ஆண்டு நான் அரசியலுக்கு வந்து ஆறு மாதகாலப்பகுதியில் ஆயிரம் ரூபா ; சம்பளத்தை பெற்றுக்கொடுத்தேன், அதேபோல் 1700 ரூபா சம்பளத்தை கட்டாயம் பெற்றுக்கொடுப்பேன் இதையும் சிலர் விமர்சிப்பார்கள், நாங்கள் தேர்தலுக்காக காட்டும் நாடகம் என்பார்கள்” – என்றார்.

 

Related Articles

Latest Articles