தனுஷ்க குணதிலக்க சிட்னியில் கைது

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னியில் நேற்று (5) கைது செய்யப்பட்டுள்ளதாக த ஆஸ்திரேலியன் செய்தி வெளியிட்டுள்ளது.

பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

சிட்னியில் இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் போட்டியின் பின்னர்  தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

தனுஷ்க குணதிலக்க மீது நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுமதியின்றி உடலுறவு கொள்வதும் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டேட்டிங் செயலி மூலம் தனுஷ்க குணதிலக்கவை சந்தித்த 29 வயது பெண், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் இந்த வார ஆரம்பத்தில் சிட்னியிலுள்ள குடியிருப்பில் நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட்  அணி வீரர் தனுஷ்க குணதிலக்க நேற்றிரவு அணி விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவர் நீதிமன்றத்தில் இன்று (6) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

திட்டமிட்டபடி தனுஷ்க குணதிலக்க இல்லாமல் இலங்கை அணி இன்று (6) காலை கொழும்பு புறப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணப் போட்டிக்காக இலங்கை அணியுடன் தனுஷ்க குணதிலக்க பயணித்தபோது காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார்.

எவ்வாறாயினும், அஷேன் பண்டார உத்தியோகபூர்வமாக மாற்றப்பட்ட போதிலும் அவர் அணியில் தொடர்ந்து விளையாடியுள்ளார்.

Related Articles

Latest Articles