பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் குற்றவாளி அல்லர் என சிட்னியின் டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
உடலுறவின் போது தனுஷ்க குணதிலக்க ஆணுறையை அகற்றியதற்கு “வாய்ப்பு இல்லை” என்று நிரூபிக்கப்பட்ட சாட்சியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக ஆரம்பத்தில் நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டபோதும் அதில் 03 குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. அந்தப் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டு மாத்திரம் நீடித்தது.
சிட்னி நகரின் டவுனிங் சென்டர் மாட்ட நீதிமன்றத்தில் குணதிலக்க மீதான வழக்கு விசாரணையின் விசேட அமர்வு செப்டம்பர் 18 ஆம் திகதி ஆரம்பமானது. நான்கு நாட்கள் விசாரணைகள் இடம்பெற்று, இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.










