தன்னை கடித்த எலியை கடித்துக் குதறிய மாணவி வைத்தியசாலையில் அனுமதி…!

சீனாவில், தன்னைக் கடித்த எலியை தானே கடித்துக் கொன்ற கல்லூரி மாணவி, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் வூசிச் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய மாணவி ஒருவர், அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் அவர் விடுதியில் தன்னுடைய அறையில் இருந்தபோது, அவரை எலி ஒன்று கடித்துள்ளது.

இதனால் அந்த மாணவி வலியால் துடித்துள்ளார். இதையடுத்து அதைப் பழிவாங்க நினைத்துள்ளார். இதனால் தன்னைக் கடித்த எலியைப் பிடித்து அதன் கழுத்தைக் கடித்து, தனது கோபத்தைத் தீர்த்துக்கொண்டார். அந்த மாணவியின் வெறித்தனமான கடியால் அந்த எலி பரிதாபமாக உயிரிழந்தது.

எலி கடித்ததில் காயம் அடைந்த அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய இந்தச் செயலைக் கண்டு வைத்தியரே அதிர்ச்சியடைந்தார். எனினும், அவருக்கு உடனே ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் அந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மாணவி நலமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles