தபால் மூலமாக பரிமாற்றம் செய்யப்பட்ட ஹசீஸ் எனும் போதைப்பொருள் திம்புளை பத்தனை பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
புலனாய்வு துறைக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிசாருக்கு புலனாய்வு துறை தகவல் வழங்கியவுடன் பொலிசாரால் குறித்த போதைப்பொருள் நேற்று மாலை(18/06/2024) கைப்பற்றப்பட்டுள்ளது.
5 கிராம் 900 மில்லிகிராம் கைப்பற்றப்பட்டுள்ளது.மேலும் இதனோடு சம்பந்தப்பட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திம்புள பத்தனை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
தகவல் : நீலமேகம் பிரசாந்த்










