பொதுத் தேர்தலுக்கான தபால் வாக்களிப்பில் பங்கேற்க முடியாதவர்களுக்காக இன்றும் நாளையும் இரு விசேட தினங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தபால் வாக்களிப்பு கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இடம்பெற்றன. அதன்போது வாக்களிக்க முடியாதவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையிலேயே இன்றும் நாளையும் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களால் கடந்த வாரம் வாக்களிக்க முடியாதவர்கள் இந்த இரண்டு தினங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
அதற்கிணங்க தமது நிறுவனங்களில் அத்தாட்சிப்படுத்தும் அதிகாரிகள் முன்னிலையில் தபால் வாக்குகளை அளிக்க முடியும் என்றும் எவ்வாறெனினும் ராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் தபால் வாக்களிப்பு ஏற்பாடுகள் அந்த பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் நிறைவுபெற்றதும் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
எதிர்காலத்தில் அந்த பிரதேசத்தில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் தினம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.