தபால் ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது! நுவரெலியாவில் சேவைகள் ஸ்தம்பிதம்!!

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும்(11) தொடர்ந்த நிலையில், நுவரெலியா மாவட்டத்திலும் தபால் சேவைகள் ஸ்தம்பிதன.

நுவரெலியா தபால் நிலையம் உட்பட தபால் திணைக்களத்துக்கு சொந்தமான கட்டடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்துமே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இரண்டாவது நாளாக தபால் தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்வதால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் மூடப்பட்டிருந்ததால் தபால் நிலையங்களில் சேவைகளை பெற்றுக்கொள்ள வந்த வாடிக்கையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்

அத்துடன், 2024 ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தபால் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.

Related Articles

Latest Articles