தமிழகத்தில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான எண்ணிக்கை வெளியானது…

அகதிகளாக பதிவு செய்த 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர் தற்போது தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர், 92,435 இலங்கையர் அகதி முகாம்களுக்குள்ளோ அல்லது வெளியிலோ தமிழ் நாட்டில் தங்கியுள்ளனர்.

தமிழகத்தில் தற்போதுமொத்தம் 106 அகதி முகாம்கள் இயங்கி வருகின்றன. தமிழக அகதி முகாம்களில் தற்போது 19,046 குடும்பங் களைச் சேர்ந்த 58,435 நபர்கள் தங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . சுமார் 10,000 குடும்பங்களைச் சேர்ந்த 34,000 இலங்கையர் இந்தியாவில் வேறு இடங்களில் வசிக்கின்றனர். இவர்கள் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பெருமளவான இலங்கையர் நாடு திரும்பியுள்ளனர். இலங்கைக்கு திரும்ப விரும்பும் நபர்களுக்கு ஆதரவளிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, ​​வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அகதிகளின் மீள்குடியேற்றம் தொடர்பான தமது பரிந்துரைகள் மற்றும் தேவைகளை சமர்ப்பிக்க முடியும். தமிழகத்தில் பல தசாப்தங்களாக எஞ்சியுள்ள இலங்கையரை பாதுகாப்பாக மீள் குடியேற்றுவதற்கு தற்போதைய நிர்வாகம் அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்படத் தயாராக உள்ளது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles