உலக அயலகத் தமிழர் தினம் ஜனவரி 11, 12 ஆம் திகதிகளில் சென்னை மாநகரத்தில் நடைப்பெற உள்ளது.
மேற்படி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று இந்தியா நோக்கி பயணமாகியுள்ளார்.
மேற்படி விஜயத்தின் போது தமிழக முதலமைச்சர் மு.கா. ஸ்டாலின் மற்றும் தமிழக சட்ட சபை உறுப்பினர்கள், இலங்கை மலையக மக்கள் குறித்த நலன் விரும்பிகள் ஆகியோரை சந்தித்து இலங்கை வாழ் மலையக மக்களின் பிரச்சனைகள், மலையக மக்களின் அபிவிருத்தி சமூக மேம்பாடு சம்பந்தமாக கலந்துரையாடவுள்ளதும் சிறப்பம்சமாகும்.
