‘தமிழர்களின் பாதுகாப்புக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியம்’

சீர்திருத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தமிழர்களின் பாதுகாப்புக்கு அவசியமானதாகும் என்று சிரேஷ்ட அரசியல் ஆய்வாளரும், இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

எதிரணி தற்போது நிறைவேற்று அதிகார ஜனதிபதி முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற நிலைப் பாட்டை எடுத்து கோஷங்களை எழுப்ப ஆரம்பித்துள்ளன.

உண்மையிலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை சீர்திருத்துவதற்குப் பதிலாக அதனை ஒழிப்பதற்கான முழக்கத்தை இட்டுவருகின்றன.

இலங்கையின் பிரகாசமான எதிர்காலத்தைப் பறித்த கொள்கைகளும் அனைத்து அடிப்படைத் தவறுகளும் நாடாளுமன்ற ஆட்சி முறைமையின் கீழாகவே நடைபெற்றுள்ளன.

மலையகத் தமிழர்களின் குடியுரிமைபறிக்கப்பட்டது. தனி சிங்கள சட்டம் உருவாக்கப்பட்டது. பொதுத்துறையில் தேர்ச்சிக்கான பரீட்சைகள், பாடசாலைகளில் பயிற்று விக்கும் முறை மாற்றம், பாடசாலைகளை மத்திய அரசின் கீழ் கையகப்படுத்தல்,பல்கலைக்கழக நுழைவுத் தரப்படுத்தல் கொள்கை ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டன.

ஜே.வி.பியின் 1971 கிளர்ச்சி மற்றும் அதன் இரத்தக்களரி ஒடுக்குமுறைசுதந்திரமான பொதுச்சேவை ஆணைக் குழு ஒழிக்கப்பட்டமை, அரச நிர்வாகத்தை அரசியல்வாதிகளுக்கு அடிபணியச் செய்யப்பட்டமை, சிங்களத்துக்கான
அரசமைப்பு அந்தஸ்து, பெளத்த மதத்துக்கு முதலிடம் ஆகியனவும் ஏற்படுத்தப்பட்டன.

1972 இல் தமிழ் புதிய புலிகளின் உருவாக்கம், 1976 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் உருவாக்கம், 1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஆகியனவும் நாடாளுன்ற முறைமையின்கீழேயே இடம்பெற்றன.

இவ்வாறிருக்கையில், ஜனாதிபதிமுறைமையின் கீழாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையக மக்களின்வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டமை, மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வுக்கான 13 ஆவது திருத்தச்சட்டம்விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை, 200 ஆடைத் தொழிற்சாலைகள் வேலைத்திட்டம் போன்ற ஏற்படுத்தப்பட்டன. ஆகவே, ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் முயற்சி, பொருத்தமற்றது. மாறாக, எதேச்சதிகார ஜனாதிபதி முறை சீர்திருத்தப்பட்டு நிறைவேற்று அதிகார முறைமை நீடிக்க வேண்டும். – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles