தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐரோப்பிய ஒன்றியக் குழு பேச்சு(Photos)

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டத் தூதுக் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியைக் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றனர்.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி. (புளொட்) மற்றும் எம்.பிக்களான இராசமாணிக்கம் சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும் பங்குபற்றியுள்ளனர்.

இலங்கையில் தமிழர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பேசப்படுகின்றது.

Related Articles

Latest Articles