தமிழ்த் தேசியப் பேரவை தயாரித்த ஆவணத்தில் தமிழரசுக் கட்சி ஒப்பமிடாது!

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு அனுப்ப என்ற பெயரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட்ட தமிழ்த் தேசியப் பேரவை தயாரித்த கடிதத்தில் ஆவணத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஒப்பமிடாது.

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கட்சியின் முடிவை இன்று அறிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும், அரசியல் விடயங்களைக் கையாள்வதற்கு மத்திய செயல் குழுவினாலே நியமிக்கப்பட்ட ஏழுபேர் கொண்ட குழுவும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று பகல் ஓர் விசேட கலந்துரையாடலை நடத்தினர்.

இதன் நிறைவில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

“இன்னொரு தரப்புத் தயாரித்து எமது மேசையில் வைத்த ஆவணத்தில் நாம் கையொப்பம் இடவில்லை. நாம் அதைவிட தீர்க்கமாகப் பல விடயங்களை ஆராய்ந்து – சொல்ல வேண்டிய முறையில் – சொல்ல வேண்டிய தருணத்தில்- தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம்செய்யும் பிரதான கட்சி என்ற வகையில்அதை வெளிப்படுத்துவோம்.” – என்றார் அவர்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

“அரசியல் தீர்வு தொடர்பில், மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், கலந்துரையா டினோம். இந்த அரசாங்கம் பதவிக்கு வரும்போது புதிய அரசமைப்பின் ஊடாக தீர்வு ஒன்று முன் வைப்போம் என்ற வாக்குறுதியுடன் வந்திருக்கின்றார்கள்.

ஆனால் தற்போது வரை அது குறித்துப் பேச்சு ஏதும் அரசுப் பக்கத்தில் இருந்துகிடையாது. சென்ற வாரம் பிரதமர் ஏதோகூறியுள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைமுற்றாக நீக்குவது தொடர்பிலும் எமதுகவனத்தைச் செலுத்துவோம். ஏனெனில்ஜே.வி.பியினர் கடந்த காலங்களில் இந்தவிடயத்திற்காக எம்மோடு இணைந்துசெயல்பட்டனர். மாற்றுச் சட்டங்களைமுன்னைய அரசாங்கங்கள் கொண்டுவந்தபோது மாற்று எதுவுமே தேவையில்லை என அவர்கள் வாதிட்டனர்.

ஆனால் தற்போது மாற்றுச் சட்டம்குறித்துப் பேசுகின்றனர். எனவே நாம்இதை கடுமையாக எதிர்க்கின்றோம்.புதிய அரசமைப்புத் தொடர்பில் அரசுஉடனடியாக தனது தீர்வை முன் வைக்கவேண்டும். அதுவரை மாகாண சபைகள் இருக்கின்றபடியே இயங்குவதற்கு நாங்கள் ஏது செய்வோம் என எமது அலுவலக வாசலில் வைத்து ஜனாதிபதியாக முன்னர் அநுரகுமார திஸ hநாயக்க ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். அதனை துரிதமாக – காலத்தை இழுத்தடிக்காது செய்ய வேண்டும்.

மாகாண சபைத் தேர்தலுக்குத் தடையாக உள்ள சட்ட திருத்தத்தைமேற்கொண்டு அதனை நிறைவேற்றவேண்டும்.

எதிர் வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில்இடம்பெறவுள்ள இலங்கை பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் சம்பந்தமானதீர்மானத்தின் காலம் நிறைவடைகின்றது.அதனால் அது நீடிக்கப்பட வேண்டும்.இதைக் கூறினால் அரசிற்கு காலஅவகாசம் நாம் பெற்றுக் கொடுப்பதாகக்கூறுவார்கள். அது அப்படி அல்ல.சர்வதேச மேற்பார்வையைத் தொடர்ந்துதக்க வைப்பதாக இருந்தால் இன்னுமொருதீர்மானம் திறைவேற்றினால் மட்டுமேமனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் அந்த மேற்பாவையை மேற்கொள்ளலாம்.

அதற்கான தீர்மானத்தைக்கொண்டு வருவதாகப் பிரித்தானியாவாக்குறுதியளித்துள்ளது. இதில் புதிதாகவந்துள்ள விடயம் செம்மணி விவகாரம்.அண்மையில் ஆணையாளரே நேரடியாகப் பார்த்துச் சென்றுள்ளார். செம்மணியில் இனப்படுகொலைக்கானஆதாரம் வெளிவருகின்றது என நாம்ஜனாதிபதிக்கு கடிதமும் எழுதியுள்ளோம்.

இதன் பிரதி ஐ.நா. ஆணையாளருக்கும்உறுப்பு நாடுகளிற்கும் வழங்கியுள்ளோம்.ஐ.நா. தீர்மானம் வருகின்ற போதுஉறுப்பு நாடுகளுக்குக் கடிதம் எழுதவேண்டும் எனத் தமிழ்த் தேசிய மக்கமுன்னணியினர் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தார்கள். அதில் சில சிவில்அமைப்புக்களும் இணைந்திருந்தார்கள.நாம் அதில் பங்குகொள்ளவில்லை.அதற்கான காரணத்தை எமது கட்சியின் தலைவர் ஊடகங்களிற்கு கூறியுள்ளார்.

அவர்களின் கூட்டத்தில் அவர்கள் ஒரு கடிதத்தைத் தயாரித்துள்ளனர். தயாரித்த கடிதத்தை தலைவருக்கும்எனக்கும் அனுப்பி வைத்துள்ளனர். அதுதொடர்பில் கூடி ஒரு தீர்மானம் எடுப்போம்எனக் கூறியதன் பின்பும், எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அனுப்பிஅவர்களின் கையொப்பத்தையும் கேட்டுள்ளனர்.

எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள ;அனைவருமே நாம் கட்சித் தீர்மானமாகவே செயற்படுவோம், தனியாகக் கையொப்பம் வைக்க மாட்டோம் எனஅவர்களுக்கு அறிவித்துள்ளனர். இது தொட்பிலும் (இன்று) பேசினோம்.
எமது நிலைப்பாடு ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் என்ன செய்யப்பட வேண்டும், தமிழ் மக்கள் சார்பாகஎவ்வாறு அமைய வேண்டும் என்பதுதொடர்பில் எமது தீர்மானத்தை சொல்லியிருக்கின்றோம். உயர்ஸ்தானிகர் வந்தபோதுகூட 2021 இல் நானும் கஜேந் திரகுமாரும் இறுதி செய்த ஓர் ஆவணம் இரா.சம்பந்தன் உள்ளிட்டோர் கையொப் பமிட்டு கையளித்தோம். அது எமது
நிலைப்பாடு. அதில் மாற்றம் இல்லை.

இந்தத் தருணத்தில் எதைச் சொல்லவேண்டும், அதை எப்படிச் சொல்லவேண்டும் என நாம் ஒரு கருத்துப்பரிமாற்றம் செய்திருக்கின்றோம். அவர்கள் தயாரித்து எமது மேசையில் வைத்தஆவணத்தில் நாம் கையொப்பம்இடவில்லை. நாம் அதைவிட தீர்க்கமாகப்பல விடயங்களை ஆராய்ந்து சொல்லவேண்டிய முறையில் தமிழ் மக்களைபிரதிநிதித்துவம் செய்யும் பிரதான கட்சிஎன்ற வகையில் உகந்த தருணத்தில்அதை வெளிப்படுத்துவோம். அத்தகையதீர்மானம் ஒன்றை இன்று எடுத்துள் ளோம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles