தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழில் இன்று வேட்புமனுத் தாக்கல்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுக்களை இன்று திங்கட்கிழமை கையளித்தனர்.

கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் வேட்புமனுக்களை அவர்கள் தாக்கல் செய்தனர்.

இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்களை  அவர்கள் தாக்கல் செய்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னர் வேட்பாளர்கள் யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

Related Articles

Latest Articles