ஜனாதிபதி பொது மன்னிப்பின்கீழ் மேலும் இரு தமிழ் அரசியல் கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சண்முகரட்ணம் சண்முகராஜன், செல்லையா நவரட்ணம் ஆகிய இருவருமே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக்கூறி செல்லையா நவரட்ணத்திற்கு 200 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், வெடிப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டிருந்த செல்லையா நவரட்ணத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னர் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுவருகின்றது. இந்நிலையிலேயே மேலும் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
