தமிழ் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு!

தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிப தித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் சார்பில் முன்னாள் எம்.பி. பா.அரியநேத் திரன் தமிழ்ப் பொது வேட்பாள ராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.

ஐனாதிபதி வேட்பாளர்கள் பலரும் தற்போது தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வரு கின்ற நிலையில் தமிழ்ப் பொது வேட்பாளரின் விஞ்ஞாபன மும் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படவுள்ளது.

இந்த விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் இனப் பிரச்சி னைக்கு தீர்வு உட்பட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை கள், தேவைகள் பலவும் உள்ளடக்கப்பட்டு இருக்கின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்தத் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles