தமிழ் பொதுவேட்பாளருக்கு சிறிதரன் ஆதரவு!

சரியான விடயத்தை தென்னிலங்கை வேட்பாளர்கள் முன்வைத்தால் அது தொடர்பிலும் பரிசீலிக்கத் தயார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்றைய தினம் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதன் நிறைவில் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறி தரன் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

“ சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு யார் இணங்கி வந்தாலும் அவர்களுடன் சேர்ந்து அது பற்றி நாம் பரிசீலிக்கத் தயார் என்பது நாம் அடிக்கடி சொல்லி வரும் விடயம்.

எமது 80 ஆண்டு கால அரசியல் கொள்கையை நிலை நிறுத்துவதற்கு தெளிவான கொள்கையை நிலை நிறுத்தித் தென்னிலங்கை வேடபாளர் யார் முன் வந்தாலும் அதனை நாம் பரிசீலிப்போம்.

பொது வேட்பாளர் தொடர்பில் கட்சியில் ஒத்த, எதிர்க் கருத்துக்கள் உண்டு. நான் ஆதரவாக எனது கருத்தைப் பதிவு செய்துள்ளேன். சரியான விடயத்தை தென்னிலங்கை வேட்பாளர்கள் முன்வைத்தால் அது தொடர்பில் பரிசீலிக்கவும் தயார். அதில் பொது வேட்பாளர் தொடர்பி லும் ஆராய்ந்து முடிவு அறிவிக்கப்படும். – என்றார்.

Related Articles

Latest Articles