ராவண எல்லயில் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து: மூவர் படுகாயம்

எல்ல – வெல்லவாய பிரதான வீதியின் ராவண எல்ல பகுதியில் லொறியொன்று 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (ஜூலை 06) இரவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த லொறி, எல்ல பகுதியில் இருந்து வெல்லவாய நோக்கி குடிநீர் போத்தல்களை ஏற்றிச் சென்றுள்ளது.

இதன்போது, கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியை விட்டு விலகி, சுமார் 75 அடி ஆழமுள்ள பள்ளத்தில் உருண்டு விழுந்து, அங்கிருந்த பெரிய பாறை ஒன்றில் சிக்கி நின்றுள்ளது.

அவ்வாறு பாறையில் மோதி தடைப்படாமல் இருந்திருந்தால், லொறி மேலும் ஆழமான பள்ளத்தில் விழுந்து பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் லொறியில் பயணித்த மூவரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக தெமோதரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

– த. டிமேஷன்

Related Articles

Latest Articles