தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு இல்லை!

“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழர் தரப்பு பொது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவில்லை. நாம் அறிவிக்கும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள்” என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பில் மேலும்

தெரிவித்த அவர், “ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிக்குமென்பது இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. யாருக்கு ஆதரவு வழங்குவதென்பது தொடர்பாக அவசரப்பட வேண்டிய தேவை கிடையாது. வாக்களிப்பு நடத்தப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் எமது தீர்மானத்தை அறிவிப்போம்.

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு ஒரு தரப்பினர் குறிப்பிடுவதை தமிழ் மக்கள் ஏற்கப் போவதில்லை. இவர்கள் ஒவ்வொரு தேர்தல்களின் போதும் தேர்தலை புறக்கணிக்குமாறு தெரிவிப்பார்கள். ஆனால் மக்கள் அந்தக் கோரிக்கையை ஏற்றதில்லை. இம்முறையும் தேர்தலை மக்கள் புறக்கணிக்கப் போவதில்லை.

தமிழ் பொது வேட்பாளருக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அவர் எங்களின் கட்சி உறுப்பினர். அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுத்துள்ளோம். இதனுடாக எமது நிலைப்பாட்டை விளங்கிக்கொள்ள வேண்டும்.

கடந்தகால தேர்தல்களிலும் எமது நிலைப்பாட்டை இறுதி தருணத்திலேயே அறிவித்தோம். அதற்கமைய 80 சதவீதமானோர் எமது தீர்மானத்துக்கமையவே வாக்களித்தனர். ஆகவே இம்முறையும் நாங்கள் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles