தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கும் காலப்பகுதியை உடன் அறிவிக்கவும்!

தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வு திட்டத்தை முன்வைக்கும் உறுதியான காலப்பகுதியை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணியை முதல் வருடத்துக்குள்ளேயே முன்னெடுக்காவிடின், இலக்கை நோக்கி நகர்வது நெருக்கடியாக அமையும் என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘ 2015 மற்றும் 2017 வரையான காலப்பகுதியில் புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய வரைவு நகல் தயாரிக்கப்பட்டது. இதற்கு தேசிய மக்கள் சக்தியும் இணங்கியது. புதிய அரசமைப்புக்குரிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருந்த தருவாயில்தான் அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கி, அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து புதிய அரசமைப்புக்குரிய பணிகள் தொடரவில்லை.

எனினும், இந்த அரசமைப்பு இறுதிப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தேசிய மக்கள் சக்தி உறுதியளித்துள்ளது. எனவே, புதிய அரசமைப்பை தேசிய மக்கள் சக்தி வெற்றிகரமாக நிறைவேற்றும் என்பது அக்கட்சிக்கு வாக்களித்த மக்களின் பிரதான எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும்.

முதல் வருடத்துக்குள்ளேயே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அதனை முன்னெடுப்பது நெருக்கடியாகக்கூட அமையலாம்.

தேசிய மக்கள் சக்திக்கு கூட்டணி பலம் இல்லாமலேயே 159 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கடந்த காலங்களில்போல் பங்காளிக்கட்சிகளின் பிரச்சினைகள் எழாது. எனவே, 3 வருடங்கள்வரை காத்திருக்காது, அதனை செய்துமுடிக்க வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசமைப்பின் ஊடாக தீர்வு வழங்கப்படும் என அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது. எமக்குரிய அரசியல் உரிமைகளைப் பற்றி பேசுவது இனவாதம் கிடையாது. எனவே, தீர்வை வழங்கும் காலப்பகுதியை அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.” – என்றார் இரா. சாணக்கியன்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles