தம்மிக்க பெரேராவே மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்!ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேராவே என்று ராஜபக்ச குடும்ப உறுப்பினரான ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
இவரின் பெயரை மொட்டு கட்சி நாளை (இன்று) புதன்கிழமை அறிவிக்கும் எனவும் அவர் நேற்று கூறினார்.
“மொட்டு கட்சி ரணிலை ஆதரிக்காது என ஓராண்டுக்கு முன்னரே நான் கூறினேன். அது நேற்று (நேற்று முன்தினம்) நடந்தது. அதேபோல மொட்டு கட்சி வேட்பாளர் தம்மிக்க பெரேரா என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன். பொருளாதாரத்தை அவரால் மட்டும்தான் மீள கட்டியெழுப்ப முடியும்.
பஸில் ராஜபக்ச ரணிலை நம்பினார், ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்ற உறுதிமொழியை ரணில் விக்கிரமசிங்க மீறிவிட்டார்;. ஆனால் அதற்கான பதிலடியை பஸில் தற்போது கொடுத்துள்ளார். தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி ஆக்கிவிட்டோ பஸில் தனது ஆட்டத்தை நிறுத்துவார்.
அடுத்த ஆட்சியில் நாமல் ராஜபக்சவே பிரதமர்.
ரணில் விக்கிரமசிங்க 4 ஆவது இடமெனில் தேர்தலில் போட்டியிடமாட்டார். இது பற்றி அவர் 14 ஆம் திகதி அறிவிக்ககூடும். அப்போதுதான் ரணிலை நம்பி சென்றவர்களுக்கு மீண்டும் எம்மை தேடிவர நேரிடும்.” ” – என்றார்.
