தலவாக்கலையில் கோர விபத்து – இரு பிள்ளைகளின் தந்தை பலி

தலவாக்கலை கொத்மலை வீதியில்  இன்று புதன்கிழமை (15) தனியார் பஸ்ஸொன்றும்,  மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலியாகியுள்ளார்.

லிந்துலை மெராயா தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நடராஜ் செல்லதுரை வயது (46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து தலவாக்கலை சுற்று வட்டத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை பஸ் தரிப்பிடத்திலிருந்து பூண்டுலோயா நோக்கி சென்ற தனியார் பஸ் பத்தனை பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுமே தலவாக்கலை சுற்று வட்டத்திற்கு முன்பாக நேருக்கு நேர் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில்  மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles