ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை – டெவன் பகுதியில் இன்று மதியம் 1.30 மணியளவில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததன் காரணமாக குறித்த வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது முறிந்த மரத்தை அகற்றும் பணிகளை பிரதேச மக்களின் உதவியுடன் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
மரம் அகற்றப்படும்வரை ஒருவழி போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிருபர் – கௌசல்யா










