தலவாக்கலை வருகிறார் உலக சிலம்பம் சம்மேளனத்தின் செயலாளர் ஆசான் செல்வராஜ்

உலக சிலம்பம் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆசான் செல்வராஜ் எதிர்வரும் 25 ஆம் திகதி தலவாக்கலைக்கு வருகை தரவுள்ளார்.

தலவாக்கலை கதிரேசன் கோவில் மண்டபத்தில் மே 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள பயிற்சி முகாமை நெறிப்படுத்தவே அவர் வருகை தருகின்றார்.
அகில இலங்கை சிலம்பம் சமமேளனமே குறித்த பயிற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

அகில இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் தலைவர் எம். திருச்செல்வம், பொதுச்செயலாளர் Y. தினேஷ் குமார் உள்ளிட்டவர்கள் இதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.

 

 

Related Articles

Latest Articles