தலிபான்களுக்கு ஐ.எஸ். எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானின் தமது கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்காக ஐ.எஸ் மற்றும் தேசிய எதிர்ப்பு முன்னணி, தலிபான்கள் மீதான தமது தாக்குதல்களை தீவிரப்படுத்தவிருப்பதாக வொஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஐ.எஸ் மற்றும் ஆப்கானின் முன்னாள் பாதுகாப்பு படையினரின் கெரில்லா தாக்குதல்கள் தலிபான்களுக்கு பிரதான அச்சுறுத்தலாக இருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலிபான்கள் தமது ஆட்சி முறை மற்றும் நடத்தை மீதான நம்பிக்கை அடிப்படையில் கடும்போக்காளர்கள் மற்றும் சீர்திருத்தவாதிகள் என பிளவுபட்டிருப்பதாகவும் அந்த பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Related Articles

Latest Articles