தலிபான்களிடம் வீழ்ந்துள்ள ஆப்கானிஸ்தானின் முக்கிய பிரதேசங்களிலிருந்து பலர் இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருப்பதால், அவர்களின் வீடுகளில் ஆயுதங்களுடன் புகுந்து பெரும் கொள்ளையில் ஈடுபடுவர்கள், அகப்படும்போதெல்லாம் தங்களை தலிபான்கள் என்று போலியாக அடையாளப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த போலி தலிபான்கள் பலர் நிஜமான தலிபான்களிடம் அகப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அகப்பட்டவர்களை வரிசையில் இருத்திவைத்து மொட்டையடித்து பயங்கர அடி கொடுத்திருக்கிறார்கள் தலிபான்கள். இந்தக்காணொலியை தங்களது நல்லாட்சியின் விளம்பரம்போல தலிபான்களே வெளியிட்டுவருகிறார்கள்.