நாடாளுமன்றத்தில் செயற்படும் கோப், கோபா மற்றும் இதர குழுக்களின் தலைமைப்பதவிகளுக்கு, முன்னர் இருந்தவர்களையே நியமிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஜனாதிபதியால் டிசம்பர் மாதம் இடைநிறுத்தப்பட்டது. இதனால் கோப் உள்ளிட்ட குழுக்களின் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டன.
புதிய நாடாளுமன்றக்கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் மேற்படி குழுக்களுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
அலரிமாளிகையில் பஸில் ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
மேற்படி குழுக்களின் தலைவர்களை மாற்றுவதற்கே நாடாளுமன்ற அமர்வு நிறுத்தப்பட்டது என எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இதனை உண்மையென நிரூபிக்கும் வகையில் நாம் செயற்படக்கூடாது. ஆகவே, கோப், கோபா உள்ளிட்ட குழுக்களன் தலைமைப்பதவி முன்னர் இருந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என பஸில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஆளுந்தரப்பில் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.
அந்தவகையில் சரித ஹேரத், அநுரபிரியதர்சன யாப்பா மற்றும் திஸ்ஸ வித்தாரண ஆகியோர் தலைமைப்பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.
