ஐக்கிய தேசியக்கட்சியின் 75 ஆவது ஆண்டு விழாவை எதிர்வரும் செப்டம்பர் 06 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவவால் கட்சி தலைமையகத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் நிகழ்வு நடத்தப்படவுள்ளது.
கட்சி மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முன்மொழிவுகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளதுடன், கீழ்மட்ட அரசியல் இயந்திரத்தை வலுப்படுத்துவதற்கான யோசனைகளும் இடம்பெறவுள்ளன.
ஐ.தே.க. தலைமைப்பதவியில் மாற்றம் வருமென அறிவிக்கப்பட்டாலும் பதவியை கைவிடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தயார் நிலையில் இல்லை. எனினும், எப்போது புதியவரிடம் பொறுப்பு கையளிக்கப்படும் என்ற அறிவிப்பை அவர் மாநாட்டில் வெளியிடக்கூடும் எனவும், 2022 செப்டம்பர்வரை ரணிலே அப்பதவியில் நீடிப்பார் எனவும் கட்சி உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.










