இலங்கை – இந்திய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் மறுமலர்ச்சிக் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கைக்கான இந்திய தூதுவரும் பங்கேற்றுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சுமார் 125 எம்.பிக்கள் பங்கேற்றுள்ளனர்.
இலங்கை – இந்திய நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக அமைச்சர் சமல் ராஜபக்சவும், பிரதித் தலைவராக சம்பந்தனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.










