தாயை தாக்கிவிட்டு காதலனுடன் ஓட்டமெடுத்த சிறுமி!

தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை தாக்கி விட்டு காதலனுடன் சென்றதாகக் கூறப்படும் 15 வயதான சிறுமி தொடர்பில் வெயங்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி தனது தாயை கொடூரமாகத் தாக்கியுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர் இதற்கும் முன்னர் ஒரு காதலனுடன் வீட்டை விட்டுச் சென்று ஒரு சில தினங்களின் பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி காதல் ஜோடியை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Latest Articles