பலாங்கொடை பகுதியில், பிறந்து 05 நாட்களேயான சிசுவொன்று தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது.
பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்னவள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.எப்.எம். அலி










