பலாங்கொடை பகுதியில் பிறந்து 45 நாட்களே ஆன சிசுவொன்று தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக உயிரிழந்துள்ளது.
பலாங்கொடை, லதுயாய பிரதேசத்தில் வசித்து வந்த தேவ்மி நெத்சரா என்ற சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
மேலும் குழந்தையின் சடலம் மீது நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக உயிரிழந்துள்ளமை தெரியவந்தது.
மேலதிக விசாரணைகளை சமனலவெவ காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.எப்.எம். அலி