ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறியோர் மீண்டும் தாய்வீடு திரும்ப வேண்டும் என்று அக்கட்சியின் உப தலைவரான ரவி கருணாநாயக்க அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு கொழும்பு சுகததாச விளையாட்டரங்களில் நடைபெற்றுவருகின்றது. இதில் வரவேற்புயை நிகழ்த்துகையிலேயே ரவி கருணாநாயக்க இவ்வாறு கூறினார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய காத்திருக்கும் இளைஞர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
நாடு தொடர்பில் சிந்தித்து முக்கியமான முடிவுகளை எடுக்க போய்தான் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவை சந்தித்தது, ஆனால் ஐதேகவின் முடிவுகள் சரி என்பதை மக்கள் இன்று ஏற்றுள்ளனர், ரணில் விக்கிரமசிங்கவால்தான் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
