“தாய் மற்றும் தாய்நாடு சொர்க்கத்தை விட உயர்ந்தவை”

“தாய் மற்றும் தாய்நாடு சொர்க்கத்தை விட உயர்ந்தவை.” அன்னை பூமியை பாதுகாக்க அயராது உழைக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..” – என்று இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட விவகாரங்களுக்கான பிரதமரின் இணைப்புச்செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
“”தாயிற்சிறந்த கோவிலுமில்லை…..” என்ற வரிகள் தமிழ் கூறும் நல்லுலகில் பவனி வரும் இரத்தினச் சுருக்கமான வார்த்தை. அன்பு,கருணை,நேசம் ஆகிய உயரிய குணங்களுக்கு உயிர் உதாரணம் காட்ட வேண்டுமானால் அதுவும் தாய் தான்.
அம்மா என்பது உலகின் மறு வார்த்தை , அம்மா அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஒரு உன்னத உறவுஒரு பெண் தன் வாழ்நாளில் அன்னையாக அனைவரினதும் வாழ்வில் உன்னதமான இடத்தை வகிக்கிறார்; இப்படிப்பட்ட அன்னையைக் கெளரவிக்கும் வகையில் தற்போது உலகெங்கும் “அன்னையர் தினம் ” கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து அன்னையர்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்..” – என்றார்.

Related Articles

Latest Articles