ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் விரைவில் மாற்றம் ஏற்படவுள்ளது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் தற்போது சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களுக்கும், கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வெற்றியளித்துள்ளது எனவும், இதன் அடிப்படையிலேயே கட்சிக்குள் மாற்றம் இடம்பெறவுள்ளது எனவும் துமிந்த திஸாநாயக்க கூறினார்.
கட்சியில் இருந்து வெளியேறியவர்களுக்கு மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்திருந்த நிலையில், அந்த முயற்சி வெற்றியளித்துள்ளது எனவும் துமிந்த குறிப்பிட்டார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதை பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவுடன், துமிந்த அணி முரண்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
