தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணி பொதுச்செயலாளர் சதீஷ் குமார், மலையக அரசியல் அரங்கத்துடன் இணைந்துள்ளார்.
நோர்வூட் நகரில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பான அறிவிப்பை அவர் விடுத்தார்.
சதீஷ் குமார், இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அங்கம் வகித்துள்ளார்.
“உரிய வயதில் உரிய வாய்ப்பு வழங்கப்படாதபோது நாம் தனித்தீர்மானங்களை
எடுக்க வேண்டிவருகின்றது.” – என்று ஊடக சந்திப்பின்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
” நான் இளையோர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவன். அப்படி பயணித்த எங்கள்அரசியல் பயணம் அங்கே சூனியமாகவே தெரிகிறது. தலைமைத்துவத்தை ஒரு சிலரேகைக்குள் வைத்து இருக்கிறார்கள். அவர்கள் இளைஞர்களை வளர விடமாட்டார்கள். தலைவருக்கு ஜால்ரா போட்டுக் கொண்டு தமது பதவியைத் தக்கவைப்பதிலேயே குறியாக உள்ளனர். ” – எனவும்
சதீஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்
