திடீர் பயணம் மேற்கொண்டு அதிரடியாக தீர்வுகளை வழங்கிய ஜீவன்

ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி , டன்பார் விளையாட்டு மைதானம் , கொட்டகலை ஆசிரியர் கலாசாலை மற்றும் கேம்பிரிட்ஜ் கல்லூரி போன்ற இடங்களுக்கு இன்று (23) எவ்வித முன்னறிவித்தலுமின்றி திடீர் கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டார் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்.

இதன்போது ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் நீண்டகால தேவையாக திகழ்ந்த விளையாட்டு மைதானத்துக்கான எஞ்சிய கட்டுமான பணிகளுக்கான நிதியை ஒதுக்குவதோடு ஆரம்ப பிரிவில் காணப்பட்ட சிறுவர் விளையாட்டு திடலை புதுப்பிக்கும் செயற்பாடுகளுக்கும் நிதி ஒதுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அமைச்சர் வழங்கியுள்ளார்.

மேலும் டன்பார் மைதானத்தில் காணப்படும் குறைபாடுகளை தீர்த்துவைக்க தேவையான நடவடிக்கைகளும் மேற்றக்கொள்ளப்பட்டன .

கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் அடையாளம் காணப்பட்ட கல்லூரியின் நீர் , மலசலகூடங்கள் மற்றும் மின்சார குறைபாடுகளை உடனடியாக தீர்ப்பதற்காண நடவடிக்கைகளை ஜீவன் தொண்டமான் மேற்கொண்டார்.

எதிர்காலத்திலும் இவ்வாறான திடீர் பயணங்கள் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles