கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியகல பொலிஸ் பாதுகாப்பு அரணுக்கு அன்மித்த பகுதியில் (23) இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து அட்டனை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்சுடன், கினிகத்தேனை பகுதியிலிருந்து கொழும்பை நோக்கி சென்ற கனரக வாகனம் ஒன்று மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என விசாரணைகளை மேற்கொண்டு வரும் கினிகத்தேனை பொலிசார் தெரிவித்தனர்.
விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் கதவு ஓரத்தில் நின்று வந்த நபர் ஒருவருக்கே பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் இந்த விபத்து சம்பவத்தில் கனரக வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி முறையற்ற ரீதியில் வாகனத்தை செலுத்தி உள்ளதால் விபத்து சம்பவித்ததாகவும் தெரிவித்தனர்.
ஆ.ரமேஷ்