தியாகிகள் நாமத்தில் கந்தலா தோட்டத்தில் கணினி மையம் திறப்பு

மலையக தியாகிகள் தினத்தையொட்டி புப்புரஸ்ஸ, கந்தலா தோட்ட தியாகிகளனான வீராசாமி மற்றும் வேலாயுதம் ஆகியோரின் நாமத்தில் V.V Online Education நிலையம் கந்தலா தோட்ட மாணவர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டது.

இலங்கையில் மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை முன்னிட்டு, மலையக தியாகிகள் தினத்தன்று தியாகிகளின் நாமத்தை நிலைநாட்டும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் பா.திருஞானத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சமூக அபிவிருத்தி தாபனத்தின் தலைவர் ஆர். இரவிராமினதும், நுவரெலியா CCD அமைப்பினதும் ஒருங்கிணைப்பில் பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஆர்.ரமேஸின் அனுசரணையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சிரேஷ்ட விரிவுரையாளர் ஆர்.ரமேஷ் கலந்து கொண்டு நிலையத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கொட்டகலை ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் சற்குருநாதன், குறித்த பாடசாலையின் அதிபர் எஸ். கணபதி, அயரி பாடசாலை அதிபர் ஆர். இராமசீலன், ஆசிரியர் பரமசிவம் உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

Related Articles

Latest Articles