திருகோணமலை எண்ணெய்க் களஞ்சிய தொகுதியை கூட்டாக அபிவிருத்தி செய்து இயக்குவது தொடர்பான இந்திய – இலங்கை இடையிலான உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட்டதாக செய்திகளில் உண்மையில் இல்லை என்று கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
குறித்த உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாகவும், இதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் உயர் ஸ்தானிகராயலம் அறிவித்துள்ளது.
2021 பெப்ரவரி 17ஆம் திகதியன்று நடைபெற்ற நிகழ்வொன்றில், இலங்கை மின்சக்தி அமைச்சர், நிகழ்த்திய உரையை, இந்த அறிக்கைகள் சரியாக பிரதிபலிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மின்சக்தி அமைச்சர் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சரின் ஊடக சந்திப்பில் கூறப்பட்டது போலவே, 2017இன் புரிந்துணர்வு உடன்படிக்கை உட்பட ஏற்கனவே அமுலில் இருக்கும் இருதரப்பு உடன்படிக்கைகளின் பிரகாரம் குறித்த எண்ணெய் களஞ்சிய தொகுதியை கூட்டாக அபிவிருத்தி செய்து இயக்குவதற்கு பரஸ்பரம் ஏற்புடையதான முறைமைகள் குறுித்து இரு அரசாங்கங்களும் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராயலம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்க்காட்டியுள்ளது.
அத்துடன், இந்த விடயம் குறித்து உத்தியோகபூர்வமான கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் அதன் பெறுபேறுகளை பரஸ்பர நலன்களின் அடிப்படையில் துரிதமாக அமுல்படுத்துவதற்கும் இந்தியா ஆவலுடன் உள்ளது என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
#lka #SriLanka #Trinco #IndiaInSriLanka